பேய் படத்தில் நடித்த திரில் அனுபவம் குறித்து திரிஷா பேட்டி

Bookmark and Share

பேய் படத்தில் நடித்த திரில் அனுபவம் குறித்து திரிஷா பேட்டி

தமிழ், தெலுங்கு, திரை உலகின் முன்னணி நாயகி என்ற இடத்தில் தொடர்ந்து இருப்பவர் திரிஷா. பிரபல கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ள இவர் தற்போது தன்னை முன்னிலைப்படுத்தும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறது. 

சமீபத்தில் பேய் படமான ‘அரண்மனை–2’ படத்தில் நடித்த திரிஷா நடித்து வரும் ‘நாயகி’ படமும் திகில் கதையம்சம் கொண்டது. பேய் படங்களில் நடிக்கும் அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது, பேயை யாரும் கண்டது இல்லை. என்றாலும் பேய் என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு. 

நானும் பேய் என்றாலும் மிகவும் பயப்படுவேன். பேய் கதையை யாராவது சொன்னால் வேறு பக்கத்தில் முகத்தை திருப்பிக்கொள்வேன். அருகில் இருப்பவர்களுடன் ஒட்டிக்கொண்டு இருப்பேன். என்றாலும் பேய் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்தது. 

‘அரண்மனை–2’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. பேயை பார்த்து பயப்படுவதாக நடிப்பதைவிட பேயாக நடித்தது மிகவும் ‘திரிலிங்’ ஆக இருந்தது. பேயாக மாறி அந்த பாத்திரமாக நடித்தபோது புல்லரித்து விட்டது. 

‘அரண்மனை–2’ படத்தில் எனது நடிப்பை பார்த்தபோது அது எனக்கு பிடித்திருந்தது. மனிதன்தான் பேயாக மாறுகிறான் என்கிறார்கள்.

அப்படி என்றால் பேயை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்? மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை. இதனால்தான் இதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றார்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions