மீண்டும் பேய் படத்தில் திரிஷா!

Bookmark and Share

மீண்டும் பேய் படத்தில் திரிஷா!

தமிழ், தெலுங்கு பட உலகில் 13 ஆண்டுகளாக கதாநாயகியாக கலக்கி வருபவர் திரிஷா. சமீபத்தில் இவர் நடித்த ‘அரண்மனை – 2’ ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது ‘நாயகி’ என்ற ‘திகில்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இது தவிர தனுசுடன் ‘கொடி’, ‘காற்று வாக்குல ரெண்டு காதல்’, ‘போகி’ ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் ‘மதுர’ இயக்குனர் மாதேஷ் இயக்கும் புதிய படத்தில் திரிஷா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவும் நாயகி படம் போல திகில் கலந்த பேய் படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு இசை அமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் ஆகியோர் இசை அமைக்கிறார்கள்.

இது குறித்து தெரிவித்த அவர்கள், முதன் முறையாக ஒரு திகில் படத்துக்கு இசை அமைக்க இருக்கிறோம். இது மிக சவலாக இருக்கும். இந்த படத்துக்காக 4 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறி உள்ளனர்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. திரிஷா நடிக்கும் இந்த பேய்படம் பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions