நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீடு

Bookmark and Share

நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீடு

நடிகை திரிஷா 2010, 11ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.கடந்த 2010, 2011ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த திரிஷாவின் கணக்கில் உண்மையான வருமானத்தை மறைத்திருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

பின்னர், அதிகாரிகள் நடிகை திரிஷாவின் வருமானம் ரூ.3 கோடியே 50 லட்சம் என்று நிர்ணயம் செய்தனர். அதன்பிறகு இந்த கணக்கிற்கு ஏற்றவாரு திரிஷா வரியையும் செலுத்தினார்.

ஆனால் திரிஷா உண்மை கணக்கை மறைத்தார் என்று வருமான வரித்துறையினர் நடிகை திரிஷாவுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் அபராதம் விதித்தது.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை திரிஷா முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், வருமான வரித்துறை சுட்டிக்காட்டிய வருமானத்துக்கு திரிஷா கணக்கு காட்டி, வரியையும் செலுத்தியுள்ளார். எனவே, அவருக்கு அபராதம் விதிப்பது தேவையற்றது என்று கூறி, அந்த அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை ஆணையர் மேல்முறையீடு செய்தார். அண்மையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை வருகிற 13ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Post your comment





Related News
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்
விஜய் சேதுபதியின் அடுத்த கட்டம் ஆரம்பம்!
விஜய் சேதுபதி, திரிஷா இணையும் படம் குறித்து முக்கிய தகவல்!
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
நயன்தாரா படத்தின் உரிமையை கைப்பற்றிய த்ரிஷா நிறுவனம்
திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
ஆமாங்க, நான் தான் லூசுப்பயன், பிரபல நடிகையிடம் சிம்பு கலாட்டா
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions