வருண்மணியனின் இன்னொரு படத்திலும் திரிஷா நடிக்க மறுப்பு

Bookmark and Share

வருண்மணியனின் இன்னொரு படத்திலும் திரிஷா நடிக்க மறுப்பு

வருண்மணியனின் இன்னொரு படத்திலும் திரிஷா நடிக்க மறுத்து விட்டார். ஏற்கனவே திரிஷா, ஜெய்யை ஜோடியாக வைத்து புதுப்படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த படத்தில் நடிக்கவும் திரிஷா கால்சீட் கொடுத்தார்.

வருண்மணியனுக்கும் திரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததும் இந்த படத்தை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கின.

ஆனால் திருமணம் நின்று போனதால் திரிஷா அப்படத்தில் நடிக்க மறுத்து விலகி விட்டார். இதனால் அவருக்கு பதில் வேறு கதாநாயகி அப்படத்தில் நடிக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக இன்னொரு படத்தில் நடிக்க திரிஷா ஒப்பந்தமாகி இருந்தார். இதன் படப்பிடிப்பை தொடங்க செல்வராகவன் தயாரானார். ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்தும் திரிஷா விலகி விட்டார்.

இப்படத்தை தயாரிப்பதற்கு வருண்மணியன் நிதி உதவி செய்ததாக கூறப்படுகிறது.

எனவே தான் இந்த படத்தில் திரிஷா நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் வருண்மணியனுடனான அனைத்து தொடர்புகளையும் முறித்துக் கொள்ளும் முடிவில் திரிஷா இருப்பதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions