ஆண்ட்ரியாவை விட்டு த்ரிஷாவை பிடித்த ஹன்சிகா!

Bookmark and Share

ஆண்ட்ரியாவை விட்டு த்ரிஷாவை பிடித்த ஹன்சிகா!

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய்லட்சுமி, வினய், சந்தானம், கோவை சரளா, சுந்தர்.சி உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் ஹன்சிகா கொலை செய்யப்பட, அவரது ஆவி ஆண்ட்ரியாவின் உடம்புக்குள் புகுந்து தன்னை கொன்றவர்களை பழிவாங்குவது போல் வரும்.

இப்போது அரண்மனை-2ல் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சித்தார்த், ஹன்சிகா, சூரி உள்பட பலர் நடிக்கின்றனர்.இக்கதைப்படி இந்த படத்திலும் ஹன்சிகா கொலை செய்யப்படுவாராம். அதையடுத்து அவர் த்ரிஷாவின் உடம்புக்குள் புகுந்து தன்னை கொலை செய்தவர்களை பழிவாங்குகிறார்.

மேலும், முதல் பாகத்தில் சந்தானம் நடித்த கதாபாத்திரத்தை இந்த முறை சூரி ஏற்றுள்ளார். முந்தைய பாகத்தை விட இந்த முறை காமெடியை விட பேயின் மிரட்டல்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் சுந்தர் சி. 

அந்த வகையில், த்ரிஷா பேயாக தோன்றும் ஒவ்வொரு காட்சிகளுமே நடுநடுங்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions