ஐதராபாத் பிரியாணி வெறுக்கும் த்ரிஷா!

Bookmark and Share

ஐதராபாத் பிரியாணி வெறுக்கும் த்ரிஷா!

தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் த்ரிஷா அரண்மனை-2, போகி, நாயகி போன்ற படங்களில் லீடு ரோலில் நடிக்கிறார். அந்த வகையில், த்ரிஷாவுக்கான மவுசு இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது. 

மேலும், இந்த மார்க்கெட்டை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொள்ள நினைக்கும் த்ரிஷா, தற்போது தனக்கு 32 வயதான போதும் அந்த முதிர்ச்சி முகத்தில் தெரியாத அளவுக்கு இளமையை பராமரித்து வருகிறார்.

இதன் காரணமாக, முன்பு மாதிரி யாராவது பார்ட்டிகளுக்கு அழைத்தால் அவர் பிடிகொடுப்பதே இல்லையாம். இரவு 10 மணி ஆகி விட்டால் பெட்ரூம் சென்று நிம்மதியாக தூங்கி விடுகிறாராம்.

அதிகாலை எழுந்து சிறிய அளவிலான உடற்பயிற்சி செய்யும் த்ரிஷா, வாக்கிங், யோகா போன்ற பயிற்சிகளையும் செய்கிறாராம். அதோடு, உணவு விஷயத்தில் கடுமையான டயட்ஸ் கடைபிடிக்கிறாராம்.

குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் தரும் உணவுகளை தவிர்க்கும் த்ரிஷா, தனக்கென வீட்டில் இருந்து உணவுகளை வரவழைத்தே சாப்பிடுகிறாராம். 

அதேசமயம் அவுட்டோர்களுக்கு செல்லும் போது, பழவகைகள், சப்பாத்தி உள்ளிட்ட டயட்ஸ் மருத்துவர் சொல்லும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். மேலும் முக்கியமாக, ஐதராபாத் செல்லும் நாட்களில் அங்குள்ள பிரியாணியை புல் கட்டு கட்டி வந்த த்ரிஷா, இப்போது அவற்றை கண்டாலே வெறுக்கிறாராம்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions