திரிஷாவுக்கு டப்பிங் பேச கற்றுக் கொடுத்த கமல்

Bookmark and Share

திரிஷாவுக்கு டப்பிங் பேச கற்றுக் கொடுத்த கமல்

கமல் நடிப்பில் வெளிவந்த ‘மன்மதன் அம்பு’ படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து வருகிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் கமலும், திரிஷாவும் கலந்துகொண்டு தங்களது காட்சிகளுக்கு டப் பேசி வருகின்றனர். 

ஏற்கெனவே, ‘மன்மதன் அம்பு’ படத்திற்கும் திரிஷா தன் சொந்த குரலிலேயே டப் பேசியிருந்தார். அதேபோல், தற்போது இந்த படத்திற்கும் அவர் தனது சொந்த குரலிலேயே டப் பேசியிருக்கிறார். டப்பிங் பேசுவதற்கு கமல்தான் அவருக்கு பயிற்சி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து திரிஷா கூறும்போது, நாம் விரும்பியதும், நம்முடைய தொழிலும் ஒன்றாக அமைந்தால் அதுதான் மிகப்பெரிய வரம். ஒரு சிறந்த மனிதர் எனக்கு கற்றுக்கொடுத்ததை மிகப்பெரிய வரமாக நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

‘தூங்காவனம்’ படத்தை கமலிடம் நீண்ட காலமாக உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions