15 வருடங்களில் 50 படங்களில் நடித்த த்ரிஷா

Bookmark and Share

15 வருடங்களில் 50 படங்களில் நடித்த த்ரிஷா

மலையாளப்பட இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா.

அதற்கு முன் ஜோதிகா நடித்த ஜோடி படம் உட்பட பல படங்களில் தினம் 200 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ரிச்சி கேர்ள் என்கிற துணை நடிகையாக இருந்தவர்தான் த்ரிஷா. ப்ரியதர்ஷன் கண்ணில் பட்ட நேரமோ என்னவோ ஒரே படத்தில் புகழ் பெற்றார்.

அவர் நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. இது ஒருவகையில் சாதனைதான்!  தமிழ்சினிமாவைப் பொறுத்தவரையில் கதாநாயகிகளின் வாழ்வு அதிகபட்சம் 5 வருடங்கள்தான்.

குறிப்பிட்ட ஒரு சில நடிகைகளே பல வருட காலம் தொடர்ந்து கதாநாயகியாக நிலைத்து நின்றிருக்கின்றனர்!  அந்த பட்டியலில் த்ரிஷாவும் சேர்ந்திருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் த்ரிஷாவுக்கு தனி ஒரு இடம் உண்டு!  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ள த்ரிஷா பலபேருடன் கிசுகிசுக்களில் அடிபட்டு, வருண்மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன பிறகும் கூட இன்னமும் தமிழ் சினிமாவில் வான்டட் ஹீரோயினாகவே இருந்து வருகிறார்.

தற்போது ஜெயம்ரவி உடன் 'பூலோகம்', 'அப்பா டக்கர்', செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், திரு இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர சில தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் த்ரிஷா! 


Post your comment





Related News
கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு ஜெயில்: சல்மான்கான் தண்டனை நிறுத்தி வைப்பு
லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிய ரஜினி!
இப்போதைக்கு தாயாக விருப்பம் இல்லை-கரீனா கபூர்..!
2 வருஷத்துக்கு சினேகாவை திரையில் பார்க்க முடியாது..!
35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் ஹிட்டான ‘சங்கராபரணம்\' மீண்டும் தமிழில்..!
மூணு வருஷத்துக்கு அப்புறம் தான் கல்யாணம்-காஜல்அகர்வால் விளக்கம்..!
கீசக வதம் செய்து பிறந்த தமிழ் சினிமாவுக்கு வயது 97
ஒரு பிளேட் சாப்பாட்டின் விலை 4 ஆயிரம்: இப்படியொரு சினிமா நூற்றாண்டு விழா தேவைதானா?
சினிமா நூற்றாண்டு விழாவில் களேபரம்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் கையிலிருந்து மைக்கை பறித்த இயக்குநர்.
சினிமா நூற்றாண்டு விழாவில் கே. பாலசந்தருக்கு விருது வழங்கிய தெழுங்கு பட உலகம்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions