சாபம் விட்ட நடிகை த்ரிஷா!

Bookmark and Share

சாபம் விட்ட நடிகை த்ரிஷா!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சக்திமான் என்ற போலீஸ் குதிரையின் கால் உடைந்தது. இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை த்ரிஷா தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கம்பால் தாக்கியதில் குதிரையின் கால் உடைந்ததாக வீடியோ காட்சிகள் இணையத்திலும் செய்தியிலும் வெளியாகின.

அந்த வீடியோவில் குதிரையை கணேஷ் ஜோஷி கம்பால் கடுமையாக தாக்கும் காட்சிகள் இருந்தது. சக்திமான் இனி நடக்கமுடியாத சூழ்நிலையில் இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் த்ரிஷா ட்விட்டரில்,“ கண்டிக்கத்தக்க கேவலமான செயல், இந்தச் செயலைச் செய்தவர் நரகத்தில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

தவிர, த்ரிஷா தெருநாய்களின் மறுவாழ்விற்கு பல்வேறு பணிகளைச் செய்துவருபவர், கடந்த தீபாவளிக்குக் கூட விலங்குகளுக்கு பாதிப்பில்லாத சத்தமில்லாத வெடிபொருட்களையே பயன்படுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்தவர், மேலும் விலங்குகள் நல வாரியத்தின் விளம்பரத் தூதராக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions