இரட்டை வேடத்தில் நாயகி திரிஷா!

Bookmark and Share

இரட்டை வேடத்தில் நாயகி  திரிஷா!

படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக திரிஷாவின் `நாயகி'  உருவாகி வருகிறது. திகில் கலந்த காமெடி படமான இதில், கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவருடன் ஜெயபிரகாஷ், பிரம்மானந்தம், ஆர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். கோபி இதை இயக்குகிறார். 20 வருடங்கள் திரிஷாவிடம் மானேஜராக இருந்த கிரிதர் இந்த படத்தை தயாரிக்கிறார். 

அவர் கதை சொன்ன 10 நிமிடங்களில் இந்த படத்தில் நடிக்க திரிஷா சம்மதம் தெரிவித்துள்ளாராம். `நாயகி' படத்தில் முதன் முறையாக திரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 

சமீபத்தில் 50-வது படத்தில் நடித்து முடித்த திரிஷா தற்போது `அரண்மனை-2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து நடிக்கும் `நாயகி' படத்தை விரைவாக முடித்து இந்த வருட இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். `நாயகி' பட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. திரிஷா இதுவரை நடித்த படங்களில் இது வித்தியாசமானது என்று டைரக்டர் கோபி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions