காலேஜ் பெண்ணாக நடிக்க 6 கிலோ எடையை குறைத்த திரிஷா

Bookmark and Share

காலேஜ் பெண்ணாக நடிக்க 6 கிலோ எடையை குறைத்த திரிஷா

நடிகை திரிஷா, சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இருப்பினும், இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவே வலம் வருகிறார். இவர் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை 2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், கமலுடன் மீண்டும் இணைந்து ‘தூங்காவனம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதுமுக இயக்குனர் கோவி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில் 20 வயது காலேஜ் பெண்ணாக நடிக்கும் திரிஷா, இதற்காக 6 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார்.

எனினும், இந்த படத்தின் பிற்பாதியில் திரிஷாவின் உடல் எடை அதிகமாக இருக்கவேண்டும் என்பதால், அதன் படப்பிடிப்பு மூன்று மாதங்களுக்கு பிறகுதான் நடைபெறும் என கூறப்படுகிறது.

இப்படத்தை திரிஷாவின் மேனேஜர், கிரிதர் தனது கிரிதர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். திகில் நிறைந்த காமெடி படமாக இது உருவாகவிருக்கிறது. திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பாடக்கர்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. 


Post your comment





Related News
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions