திரிஷாவின் செய்கையை பார்த்து அதிர்ச்சியான அவரது தாயார் உமா

Bookmark and Share

திரிஷாவின் செய்கையை பார்த்து அதிர்ச்சியான அவரது தாயார் உமா

கதாநாகிகளுக்கு ரசிகர் பட்டாளம் மிக பெரிய அளவில் அமைவது கடினம். ஆனால் அந்த போக்கை உடைத்தெறிந்த த்ரிஷவுக்கு என்ற ரசிகர் மன்றங்கள் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டன.

மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, சமீபகாலமாக அதிரடியான வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, தனுசுடன் நடித்த கொடி படத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடி வில்லியாக நடித்திருந்தார் திரிஷா. அதையடுத்து திரிஷாவைத்தேடி ஆக்சன் கலந்த வேடங்கள் செல்லத் தொடங்கின. அந்த வகையில், நாயகி படத்தை அடுத்து சதுரங்கவேட்டை-2, மோகினி, கர்ஜனை என பல படங்களில் நடித்து வரும் திரிஷா, கர்ஜனை படத்தில் ஆக்சன் காட்சியிலும் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் திரிஷா ஆக்சன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது ரொம்ப சந்தோசப்பட்டாராம் அவரது அம்மா உமா கிருஷ்ணன். ஆனால், பின்னர் திரிஷா சண்டை காட்சிகளில் நடிக்கப்போகிறார் என்றதும் அவரை பயம் பற்றிக்கொண்டதாம். சண்டை காட்சியில் திரிஷா ரோப்பில் தொங்கியபடி நடித்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அவர், ஸ்பாட்டில் அமர்ந்தபடி திரிஷாவுக்காக பிரேயர் பண்ணிக்கொண்டேயிருந்தாராம். அதையடுத்து திரிஷா எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடித்து விட்டு வந்தபோது ஓடிச்சென்று அவரை கட்டித்தழுவிக்கொண்டாராம் தாய்குலம்.

 


Post your comment





Related News
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்
விஜய் சேதுபதியின் அடுத்த கட்டம் ஆரம்பம்!
விஜய் சேதுபதி, திரிஷா இணையும் படம் குறித்து முக்கிய தகவல்!
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
நயன்தாரா படத்தின் உரிமையை கைப்பற்றிய த்ரிஷா நிறுவனம்
நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீடு
திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions