போலீஸ் வேடத்தில் நடிக்கும் திரிஷா?

Bookmark and Share

போலீஸ் வேடத்தில் நடிக்கும் திரிஷா?

திரிஷா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’, கமலுடன் 'தூங்காவனம்' ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில், கமலுடன் இவர் இணைந்து நடிக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது படக்குழு தரப்பிலிருந்து உறுதிபட கூறவில்லை.

எனினும், ஏற்கெனவே திரிஷா ‘தூங்காவனம்’ படத்தில் இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரம் என்று கூறியிருந்தார். அதை வைத்து பார்க்கும்போது, அவர் இதுவரை நடித்திராத போலீஸ் வேடத்தில் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கி வருகிறார்.

கமல், திரிஷாவுடன் பிரகாஷ் ராஜ், கிஷோர், சம்பத், மதுஷாலினி, யூகி சேது ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளனர்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions