அணிலுக்கு நெருக்கமான திரிஷா

Bookmark and Share

அணிலுக்கு நெருக்கமான திரிஷா

முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவிற்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் சில காரணங்களால் இவர்களுடைய திருமணம் தடைபட்டது. இதன் பிறகு திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது கமலுடன் இணைந்து ‘தூங்காவனம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகர்களுடன் திரிஷாவை ஜோடியாக்க பல முயற்சிகள் நடந்து வருகிறது.

‘திருமணம் முறிந்த பிறகு நான் தனிமையாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன். செல்லப் பிராணிகளுடன் என்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறேன். திருமணம் நின்றதற்கு நான் வருத்தப்படவில்லை’ என்று திரிஷா கூறினார்.

சினிமாவைத் தவிர செல்லப் பிராணிகளுடன் மிக நெருக்கமாக பழகி வரும் திரிஷா, அவ்வப்போது தனக்கு பிடித்த விலங்குகளுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்கிறார். அந்த வரிசையில் இப்போது ஒரு குட்டி அணில் இணைந்துள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கேரவனுக்குள் வந்த அந்த அணிலுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions