திகில் படத்தில் நடிக்கும் த்ரிஷா

Bookmark and Share

திகில் படத்தில் நடிக்கும் த்ரிஷா

திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை த்ரிஷா குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தால், அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

தற்போது அவருடைய மேனேஜர் கிரிதர், தமிழ், கன்னடத்தில் தயாரிக்க உள்ள ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை தெலுங்கில் 'லவ் யு பங்காரம்' என்ற படத்தை இயக்கிய கோவி இயக்க உள்ளார்.

த்ரிஷாவின் மேனேஜேரான கிரிதர் இதற்கு முன் நாக சௌரியா, அவிகா கோர் நடித்த 'லட்சுமி ராவே மா இன்டிக்கி' என்ற தெலுங்குப் படத்தை தயாரித்துள்ளார். த்ரிஷா இதுவரை எந்த ஒரு திகில் படத்திலும் நடித்து கிடையாது.

அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு  த்ரிஷாவுக்கு பயம் என முன்னர் செய்திகள் வெளிவந்தது. ஆனால், த்ரிஷா அதை மறுத்தார், எனக்கு அந்த மாதிரியான படங்கள் வருவதில்லை, அதனால் அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவில்லை என்றார்.

இப்போது த்ரிஷாவைத் தேடி இந்தப் படம் வெளிவந்ததால் த்ரிஷா நடிக்க சம்மதித்தாராம். இந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரமும் என்னை மிகவும் அற்புதமாக உள்ளது. படப்பிடிப்பு மே மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது,” என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பாக இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களில் நடித்து விடுவதென த்ரிஷா முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது.


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions