த்ரிஷாவின் மானேஜர் தயாரிக்கும் 3 மொழிப்படம்

Bookmark and Share

த்ரிஷாவின் மானேஜர் தயாரிக்கும் 3 மொழிப்படம்

திருமணத்துக்கு முன்பு முடிந்தவரை நிறைய படங்களில் நடித்து வெயிட்டான தொகையை சம்பாதித்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் த்ரிஷா. 'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் 'அப்பாடக்கர்' படத்தில் நடித்து வரும் த்ரிஷா, தற்போது செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார்.

இவை தவிர ஜீவா உடன் ஒரு படத்திலும் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.  இன்னொருபுறம் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் 'லயன்' என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.  

மேற்கண்ட படங்களைத் தவிர்த்து  தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் 3 நாயகிகள் நடிக்கும் படமொன்றிலும்  நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் த்ரிஷா.  இப்படத்தை 'கிரிதர் புரொடக்ஷன் ஹவுஸ்' என்ற பெயரில் த்ரிஷாவின் மேனேஜரான கிரிதர்  தயாரிக்கிறார்.  

ஹாரரும், காமெடியும் கலந்த இந்த பேய்ப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் உருவாகவிருக்கிறது.  'லவ் யூ பங்காரம்' படத்தின் இயக்குனர் கோவி இப்படத்தை இயக்கவிருக்கிறார்.  

மே மாதத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை நேரடி தமிழ்ப்படம்போல் மார்க்கெட்டிங் செய்யும்படி தன் மானேஜருக்கு ஆலோசனை வழங்கி உள்ளாராம் நடிகை த்ரிஷா.


Post your comment





Related News
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions