த்ரிஷாவின் ஜாலி டூர்!

Bookmark and Share

த்ரிஷாவின் ஜாலி டூர்!

தொழில் அதிபர் மற்றும் படத்தயாரிப்பாளரான வருண்மணியனை திருமணம் செய்ய இருக்கிறார் த்ரிஷா. கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துவிட்டது.

வருண்மணியன் பல ஆயிரம் கோடி சொத்துக்களை வைத்திருப்பவர். எனவே திருமணத்துக்குப் பிறகு த்ரிஷா நடிக்கக்கூடாது என்று வருண்மணியனின் குடும்பத்தார் கண்டிஷன் போட்டுள்ளார்கள்.

அதற்கு த்ரிஷாவும் அவரது அம்மாவும் அரம்பத்தில் தயங்கி உள்ளனர். பிறகு அந்த கண்டிஷனுக்கு உடன்பட்டுள்ளனர். இந்நிலையில் திருமணத்துக்கு முன் முடிந்தளவுக்கு தன்னைத் தேடிவரும் படங்களை ஒப்புக்கொண்டு நடிப்பது என்று முடிவு செய்துள்ள த்ரிஷா தற்போது நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்.

அவற்றில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கும் அப்பாடக்கர் படமும் ஒன்று. தற்போது பொள்ளாச்சியில் அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தன்னுடைய போர்ஷன் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பாமல், பொள்ளாச்சியிலேயே தங்கிவிட்டார் த்ரிஷா.

தன்னுடைய ப்ரண்ட்ஸ் மற்றும் வருண்மணியனை பொள்ளாச்சிக்கு வரவழைத்த த்ரிஷா பொள்ளாச்சியை சுற்றியுள்ள வால்பாறை போன்ற இடங்களுக்கு ஜாலி டூர் சென்றுள்ளார்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions