அடுத்த படத்திற்காக லண்டன் செல்லும் திரிஷா!

Bookmark and Share

அடுத்த படத்திற்காக லண்டன் செல்லும் திரிஷா!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது ‘நாயகி’ படம் உருவாகியுள்ளது. இதில் திரிஷா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இது திகில் படமாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக ‘மதுர’ படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதுவும் நாயகி படம் போல திகில் கலந்த பேய் படமாக உருவாக இருக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற இருக்கிறது. இதற்காக படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க இருக்கின்றனர். மேலும் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.

தனுஷுடன் திரிஷா நடித்துள்ள ‘கொடி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா அரசியல்வாதியாக நடித்துள்ளார்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions