மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பது த்ரிஷாவுக்கு ரொம்ப ஆர்வமாம்!

Bookmark and Share

மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பது த்ரிஷாவுக்கு ரொம்ப ஆர்வமாம்!

ஒரு காலத்தில் சிங்கிள் ஹீரோயினி கொண்ட கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வந்தவர் த்ரிஷா. ஆனால் பதினோறு ஆண்டுகளாக அப்படி நடித்து அவருக்கு போரடித்து விட்டதோ என்னவோ.

இப்போது மல்டி ஸ்டார் கதைகளில் நடிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது என்கிறார்.இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், எனக்கு எப்போதுமே மல்டி ஸ்டார் படம்னா ரொம்ப பிடிக்கும்.

காரணம், ஒவ்வொருத்தரோடு டேலண்டும் முழுசாக வெளிப்படும். செட்டுல ஜாலியா பேசிக்கிட்டாலும், நடிப்புன்னு கேமராவுக்கு முன்னாடி வரும்போது ஒரு போட்டி இருக்கும். அந்த வகையில், இப்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள சகலகலா வல்லவன், சுந்தர்.சியின் அரண்மனை படங்களில் மல்டி ஸ்டார் கதைகளில் நடித்திருக்கிறேன்.

இதில் சகலகலா வல்லவன் படத்தைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால், இன்னொரு நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். எனக்கு ரொம்ப அழகான ரோல். கடைசியாக தெலுங்கில் ஒரு படத்தில் காமெடியாக நடித்தேன்.

அதன்பிறகு இந்த படத்தில் இதுவரை நான் நடித்திராத காமெடி வேடம். ஜெயம்ரவியுடன் எனக்கு இது 3வது படம். இதுவரை அவருடன் நான் நடித்த சம்திங் சம்திங் படத்தைப்பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள். ஆனால் இனிமேல் இந்த சகலகலா வல்லவன் படத்தைப் பற்றி பேசுவார்கள் என்கிறார் த்ரிஷா. 

 


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions