குயின் ரீமேக்கில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை!

Bookmark and Share

குயின் ரீமேக்கில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை!

இந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு கங்கனா ரணாவத் நடிப்பில் வெளிவந்த படம் ‘குயின்’. இப்படத்தை விகாஸ் பாகல் என்பவர் இயக்கியிருந்தார்.

அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்யா என இரு பெரிய தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரித்திருந்தனர். விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

தென்னிந்திய மொழிகளில் ரீமேக் உரிமைகளை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். இதையடுத்து, இப்படத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

தற்போது, குயின் ரீமேக்கில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இப்படத்திற்காக தொடர்ச்சியாக தேதிகள் கேட்பதால், இதுகுறித்த ஆலோசனையில் இருக்கிறாராம் திரிஷா.

திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அரண்மனை-2’ படம் பெரியளவில் வெற்றியடைவில்லை. இருப்பினும், ‘நாயகி’ ‘மோகினி’ ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
திரிஷாவின் திடீர் முடிவு
முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions