த்ரிஷாவை போட்டி போட்டு புக் பண்ணும் தயாரிப்பாளர்கள்!

Bookmark and Share

த்ரிஷாவை போட்டி போட்டு புக் பண்ணும் தயாரிப்பாளர்கள்!

ஒரு நடிகையின் முகத்தில் கல்யாண களை வந்து விட்டாலே அவரை கண்டால் காத தூரததுக்கு அப்பால் ஓடி விடுவார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாகி விட்டது.

நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று த்ரிஷா ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து நிச்சயதார்த்தமும் நடந்து விட்டபோதும் இப்போது அவரை விடுவதாக இல்லை. கோலிவுட். நான் நீயென்று போட்டி போட்டு அவரை படங்களுக்கு புக் பண்ணி வருகிறார்கள்.  

இதனால் சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாடா காட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த த்ரிஷாவுக்கு இப்போது நடிப்பை தொடர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

தன்னை மதிக்கிறவர்களுக்கு தானும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பண்பு கொண்ட த்ரிஷா, சினிமா தன்னை அளவுக்கதிகமாக மரியாதை கொடுபபதால் அதை விட்டு எப்படி விலகிச்செல்வது என்று ரொம்பவே யோசிக்கிறாராம்.

இந்த நிலையில், த்ரிஷா கேட்காமலேயே படத்துக்குப்படம் அவரது கூலியை உயர்த்திக்கொண்டே போகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

இதைப்பார்த்து மார்க்கெட்டில் இருக்கும் தமன்னா, காஜல்அகர்வால், ஹன்சிகா போன்ற நடிகைகள் த்ரிஷா வெளியேறி விட்டால் அவருக்கான படங்களை தாங்கள் கைப்பற்றி விடலாம் என்று போட்டு வைத்திருந்த கணக்கு தப்புக்கணக்காகிக்கொண்டு போவதோடு, அவரது வேல்யூ நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போவதைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions