த்ரிஷாவுக்குத் தொடரும் திருமண அதிர்ஷ்டம்

Bookmark and Share

த்ரிஷாவுக்குத் தொடரும் திருமண அதிர்ஷ்டம்

திருமண நிச்சயம் ஆன பின்னும் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம்தான் இருக்கிறதாம். தற்போது தமிழில் 'அப்பா டக்கர், போகி' ஆகிய தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் 'லயன்' படத்திலும் நடித்து வருகிறார்.

அடுத்து தமிழில் பிரசாந்த் ஜோடியாக ’ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிந்தியில் அக்ஷய் குமார், காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த ’ஸ்பெஷல் 26’ வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். தமிழில் தயாராக உள்ள இதன் ரீமேக்கில் பிரசாந்த் நாயகனாகவும், தெலுங்கில் ரவி தேஜா நாயகனாகவும் நடிக்க உள்ளார்களாம்.

இரு மொழிகளிலும் த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள். த்ரிஷா திருமண நிச்சயத்திற்குப் பின் நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படிதான் திரு இயக்கத்தில் ஜெய் ஜோடியாக ’போகி’ படத்தில் நடிக்கிறார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் த்ரிஷா இதுவரை பிரசாந்த் ஜோடியாக நடித்ததில்லை.

ஆனால், பிரசாந்த் நடித்த ’ஜோடி’ படத்தில் த்ரிஷா ’ரிச் கேர்ள்’ ஆக ஒரே ஒரு காட்சியில் தலை காட்டியிருப்பார். ’ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் மட்டுமல்லாது கன்னட ரீமேக்கிலும் த்ரிஷாவே நடிக்க உள்ளாராம்.


Post your comment





Related News
என் பாடலுக்கு கிடைத்த ஆஸ்கார் விருது இது தான்
சகலகலா வல்லவன் ஆக மாறிய அப்பாடக்கர்
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!
இறுதி கட்டத்தை நெருங்கும் ஜெயம் ரவியின் அப்பாடக்கர்
அப்பாடக்கர் படத்தில் சூரிக்கு முக்கியத்துவம்! கடுப்பான ஜெயம் ரவியின் அப்பா!
பன்றிக் காய்ச்சல் பீதியைக் கிளப்பிய \'அப்பாடக்கர்\' த்ரிஷா
அப்பாடக்கரின் கதை...!
இறுதி கட்டத்தில் அப்பாடக்கர்
பொள்ளாச்சியில் மையம் கொண்டிருக்கும் அப்பாடக்கர் டீம்
ஆக்சன் ஹீரோவான பிரேம்ஜி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions