திரிஷா பட ஷூட்டிங் அதிகாரிகள் அனுமதிக்காக காத்திருக்கும் பட குழு

Bookmark and Share

திரிஷா பட ஷூட்டிங் அதிகாரிகள் அனுமதிக்காக காத்திருக்கும் பட குழு

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் திரிஷா. 2 வருடத்துக்கு முன் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘ரம்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந் தார். ‘ரம்பா ஊர்வசி மேனகா’ பெயரை சுருக்கமே ரம்.

தில் ராஜூ இயக்குனராக பொறுப்பேற்றதுடன் படப்பிடிப்பும் ஜரூராக நடந்தது. துபாய் போன்ற பல நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென்று படப்பிடிப்பு  நிறுத்தப்பட்டது. பின்னர் அப்படம் கைவிடப்பட்டது. 

தற்போது தமிழ் தெலுங்கில் உருவாகும் ‘போகி’ படத்தில் திரிஷா நடித்து வருகிறார். அவருடன் ஓவியா, பூனம் பஜ்வாவும் நடிக்கின்றனர். தெலுங்கில் இப்படத்துக்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. தற்போது ‘மெமு’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதன் படப்பிடிப்பில் திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் ஐதராபாத் விமான நிலையம் அருகே விபத்து காட்சியை ஒன்றை படமாக்க அதிகாரிகளிடம் பர்மிஷன் கேட்டு காத்திருக்கிறது பட குழு. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions