ரஜினியுடன் எந்திரன்-2 ல் ஜோடி சேருவாரா திரிஷா?

Bookmark and Share

ரஜினியுடன் எந்திரன்-2 ல் ஜோடி சேருவாரா திரிஷா?

ரஜினிகாந்தின் ‘எந்திரன்-2’ பட வேலைகளுக்காக ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர்களை சந்திக்க ரஜினியும் டைரக்டர் ஷங்கரும் அமெரிக்கா சென்றுள்ளனர். இதன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார். 

இரண்டாம் பாகத்தில் வேறு நடிகையை தேர்வு செய்கின்றனர். ரஜினியுடன் நடிக்க நடிகைகள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ‘எந்திரன்-2’ படத்தில் நடிக்க அவருடன் ஏற்கனவே ஜோடி சேர்ந்த பல நடிகைகள் முயற்சிக்கின்றனர்.

ஒரு கதாநாயகி வேடத்துக்கு எமிஜாக்சனை ஷங்கர் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. இன்னொரு கதாநாயகி தேர்வு நடக்கிறது, இந்த நிலையில் திரிஷாவும் ரஜினியுடன் ஜோடி சேர விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் நான் ஜோடியாக நடித்து விட்டேன். ஆனால் ரஜினிகாந்துடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.’ என்றார்.

எந்திரன்-2 படத்தில் நடிக்க திரிஷா முயற்சிப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம்ரவி போன்றோருடன் திரிஷா ஏற்கனவே நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாகுபலி 2 இந்திய சினிமாவிற்கு பெருமை: ரஜினி புகழாரம்!
பாகுபலி-2': ரஜினிகாந்த் அல்லாத ஒருபடம் படைக்கும் புதிய சாதனை
எந்திரன் 2 படத்தில் எமி ஜாக்சனின் கதாபாத்திரம் வெளியானது
எந்திரன்-2, பட்ஜெட் 260 கோடி, பிசினஸ் 350 கோடி, அப்போ வசூல்...?!
எந்திரன் 2ல் நடிக்க அர்னால்டிற்கு 100 கோடி சம்பளம்
எந்திரன் - 2... என்னதான் நடக்குது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions