த்ரிஷாவைப் பாராட்டும் நட்சத்திரங்கள்

Bookmark and Share

த்ரிஷாவைப் பாராட்டும் நட்சத்திரங்கள்

சென்னைப் பெண் த்ரிஷாவிற்கு திருமணம் நிச்சயமானாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதானிருக்கிறார். தற்போது தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக அப்பா டக்கர் படத்திலும், 'போகி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருவது சாதாரண விஷயமல்ல. த்ரிஷா நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களே. சமீபத்தில் அஜித் ஜோடியாக நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷா அதிகம் பேசப்பட்டார். சில நாட்களுக்கு முன் த்ரிஷா அவருடைய சமூக வலைத்தளத்தில் அவரைப் பற்றி மற்றவர்கள் சொன்ன பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

த்ரிஷாவைப் பற்றி அனைவருமே பாராட்டித் தள்ளியிருந்தார்கள். திரையுலகில் பலராலும் நேசிக்கப்படும் நட்சத்திரமாக த்ரிஷா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதில் கௌதம் மேனனின் பாராட்டுதான் ஆஹா, ஓஹோ என்று அமைந்துள்ளது.

கௌதம் மேனன் -   த்ரிஷா என்னுடைய அபிமான நடிகை. நான் எப்போது கதை எழுதினாலும் அதில் த்ரிஷாதான் என்னுடைய முதல் சாய்ஸ் ஆக இருப்பார்.

சமந்தா - நான் த்ரிஷாவின் தீவிரமான ரசிகை

நயன்தாரா - த்ரிஷா என்னுடைய நெருங்கிய தோழி, சிறந்த மனிதாபிமானம் மிக்கவர்

எமி ஜாக்சன் - த்ரிஷா எனக்கு இன்ஸ்பிரேஷன்

நிகிஷா பட்டேல் - த்ரிஷாதான் எனக்கு ரோல் மாடல்

ஆர்யா - த்ரிஷா என்னுடைய சிறந்த தோழி

விஷால் - நான் த்ரிஷாவின் தீவிரமான ரசிகன்

ஜெயம் ரவி - த்ரிஷா என்னுடைய சிறந்த தோழி, உடன் நடிப்பவர்களில் பிடித்தமான நடிகை

ஜீவா - த்ரிஷா, மகிழ்ச்சிகரமானவர், அதிக ஈடுபாடு கொண்டவர்

மகேஷ் பாபு - த்ரிஷா , என்னுடன் நடிப்பவர்களில் பிடித்த நடிகை, என கூறியிருக்கிறார்கள்.

த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் வருண் மணியனே பொறமைப்படும் அளவிற்கு த்ரிஷாவை நமது நட்சத்திரங்கள் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions