அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் என் மகன் ஆதிக் – ரவி கந்தசாமி

Bookmark and Share

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் என் மகன் ஆதிக் – ரவி கந்தசாமி

கனவெல்லாம்  பலிக்குதே என்ற தல அஜீத்தின் பாடலில் வரும் என்னை விடஎந்தன் பிள்ளை  ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறக்கிறதே என்ற வரிகள் ஜி வி பிரகாஷ் இசையில் வெளி வந்து ஹிட்டானது.  

இன்று அதே ஜி .வி .பிரகாஷ் இசை  அமைத்து நாயகனாக நடிக்கும்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் இயக்குனர் ஆதிக் மற்றும் அப்படத்தில் உதவி இயக்குனராய் பணி புரியும் அவரது தந்தை ரவி கந்தசாமி ஆகியோர் இந்த வரிகளுக்கு உரிமையாளர்கள் ஆகிறார்கள்.

“அப்பா, எனது வாழ்க்கைல மிக முக்கியமானவர்.பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்க கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே அவர்தான். பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.

அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் தடை படும் போதும்  எனக்குள்ள ஜெயிக்கனும் அப்படிங்கற வெறி வரும். நானே என்னோட பாதையை தேர்ந்தெடுத்து இன்னிக்கு GV பிரகாஷ் குமாரிடம்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் கதையைக் கூறி இன்று என் முதல் படத்தை இயக்கி வருகிறேன. இந்தக் காலக் கட்டத்தில் எங்கள் வீட்டில் ஒருவர் தான் இயக்குனராக வேண்டும் என  இருக்கிறதோ என்னவோ. ஆனால் ஒன்று என் அப்பாவும் ஒருப் படம் இயக்குவார் தேவை பட்டால் நான் அவருக்கு உதவவும் செய்வேன்” என்று தன் அப்பா கனவை நினைவேற்றிய சந்தோஷத்துடன் கூறினார் அறிமுக இயக்குனர் ஆதிக்.

“ ஆதிக் வளரும் போதே நான்  தன்னம்பிக்கையும் தைரியத்தையும் அதே அளவுக்கு சினிமா ஆர்வத்தையும் கற்றுக் கொடுத்தேன்.அப்பனுக்கு பாடம் தந்த சுப்பனைப் போல் என் மகனை நான் .பாவிக்கேறேன். நான் ஜெயிக்க வேண்டும் என்பது கனவு , என் மகன் ஜெயிக்க வேண்டும் என்பது மாபெரும் கனவு.என் மனைவிக்கு மகன் இயக்குனரானது மிக பெருமை ஒரு அம்மாவாக, எனக்கும் தான் ஒரு அப்பாவாக. ” என்று பெருமிதத்தோடு கூறினார் ரவி கந்தசாமி. 


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions