த்ரிஷா இல்லனா நயன்தாரா வருமா? வராதா?

Bookmark and Share

த்ரிஷா இல்லனா நயன்தாரா வருமா? வராதா?

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வியுடன் கயல் ஆனந்தி, மனீஷாயாதவ் உள்பட பலர் நடித்துள்ளனர். முதல் படத்தை விட இந்த படத்தில் பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

மேலும், இந்த படம் செப்டம்பர் 17-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தியேட்டர்களிலும் டிக்கெட் ரிசர்வேசன் செய்யப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார் என்பவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் ஏற்கனவே கடனாக பெற்ற 75 லட்சத்தை ஜூன் மாதமே கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாம்.

அப்படி இல்லையேல் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை வெளியிட முடியாது என்றும் கூறப்பட்டிருந்ததாம். ஆனால், அந்த பணம் திருப்பிக்கொடுக்கப்படாத நிலையில், படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன.

இந்தநிலையில், சி.ஜெ.ஜெயக்குமார் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக அவர் மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளர்களாம்.

அதனால் இன்று நீதிமன்றத்தில் வரும் தீர்ப்பை பொறுத்தே த்ரிஷா இலன்னா நயன்தாரா படம் 17-ந்தேதி தியேட்டருக்கு வருமா? இல்லையா? என்பது தெரியவரும்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions