த்ரிஷா இல்லனா நயன்தாராவுல இப்போ மனிஷாவும் சேர்ந்தாச்சு

Bookmark and Share

த்ரிஷா இல்லனா நயன்தாராவுல இப்போ மனிஷாவும் சேர்ந்தாச்சு

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக அவதாரமெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இன்னொரு நாயகியாக மனிஷா யாதவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மனிஷா யாதவ், தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஜன்னலோரம்’, ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் மனிஷா யாதவ் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ஏற்கெனவே நடிகை சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சிம்ரன் நடிக்கும் காட்சிகளை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப் போவதாக தெரிகிறது. 


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions