த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்க்காத ஜி.வி.பிரகாஷ் குடும்பம்

Bookmark and Share

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்க்காத ஜி.வி.பிரகாஷ் குடும்பம்

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் மிகவும் கவர்ச்சியான காட்சிகளுடன் இளசுகளுக்கான படமாக வெளியானது. இதனால் ஜி.வி.பிரகாஷை எல்லாரும் பிட்டுப் பட நாயகன் என்னும் அளவிற்கு சொல்லத் துவங்கிவிட்டனர்.

இது குறித்து ஜிவி.பிரகாஷ் “இந்தப் படம் இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட படம். இது குடும்பப் படமல்ல. எங்களுக்கான ஆடியன்ஸ் யார் என்பதிலும் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

எனது இமேஜ் பாதிக்கப்படப்போவதும் இல்லை. காரணம் நான் தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடிக்கப் போவதில்லை. அடுத்தடுத்து கலவையான படங்களில் நடித்து வருகிறேன். புரூஸ்லீ குழந்தைகளுக்கான பொழுதுபோக்குப் படம். கெட்டப் பையன்டா கார்த்தி படம் காதல் ரொமாண்டிக் படம் எனினும் ‘யு’ படம் தான்.

சில படங்கள் எதிர்விதமான அலைகளை ஏற்படுத்துவது இயல்பு.  துள்ளுவதோ இளமை வந்த புதிதில் எதிரான கருத்துகளே கிடைத்தன. ஆனால் அந்தப் படம் சென்சேஷனல் படமாக அமையவில்லையா?.

அதே போல் தான் நாங்கள் இந்தப் படத்தை ஆரம்பம் முதலே யாருக்கான படம் என்பதில் துவங்கி எந்தவித மறைமுக விளம்பரமும் இல்லாமல், சரியாக இளைஞர்களை மட்டுமே குறி வைத்து விளம்பரப் படுத்தினோம் என்றார்.

மேலும் இந்த படத்தை ஜி.வி அவரின் குடும்பத்தாரை பார்க்க விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions