
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமான படம் ‘பென்சில்’. ஆனால், அதன்பிறகு இவர் நடித்த ‘டார்லிங்’ படம் முன்னதாக வெளிவந்துவிட்டது. தற்போது, ‘பென்சில்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் வெளியிட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் வேலைகளில் களமிறங்கி, நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சிம்ரன் 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்ட இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின்னர், தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வரும் இவர், இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Post your comment