மீண்டும் கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா - ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் கதை!

Bookmark and Share

மீண்டும் கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா - ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் கதை!

தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஒரே நடிகை த்ரிஷா தான். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நிச்சயமானது. இதனால் த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறையும் என்று பார்த்தால் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

தற்போது தமிழில் அப்பாடக்கர், தெலுங்கில் இரண்டு படம் என பிஸியாக இருக்கும் த்ரிஷா அடுத்தப்படியாக கமலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கமலின், மன்மதன் அம்பு படத்தில் முதன்முறையாக த்ரிஷா இணைந்து நடித்தார்.

இப்போது மீண்டும் இணையும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. உத்தம வில்லன், விஸ்வரூபம்-2, பாபநாசம்... என வரிசையாக மூன்று படங்களில் நடித்து முடித்து விட்டார் கமல்.

இதில் உத்தம வில்லன் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து மற்ற  படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. இந்த படங்களுக்கு பிறகு கமல், அடுத்து ஒரு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

ஆக்ஷ்ன்-த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தை கமலின் உதவியாளர் இயக்குகிறார். கமலே தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார். கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணியில் இப்படத்தின் கதை அமைய இருக்கிறதாம்.

இதில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்டுள்ளனர். த்ரிஷாவும் கதை கேட்டுள்ளார். ஆனால் இன்னும் ஓ.கே. சொல்லவில்லை. படத்தில் த்ரிஷாவுக்கு மிகவும் வித்தியாசமான, ஸ்டைலிஷான வேடமாம், அதனால் கண்டிப்பாக அவர் நடிப்பார் என்கிறார்கள். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.


Post your comment





Related News
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
ஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்! அடக் கடவுளே…
சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”
ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்
ஜேம்ஸ் பாண்ட் புதியப்பட சண்டைக் காட்சியில் திடீர் விபத்து - கதாநாயகன் டேனியல் கிரைக்குக்கு அவசர ஆபரேஷன்
ஜேம்ஸ்பாண்ட் படக் கதை திருட்டு
புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்துக்குப் பெயர் ஸ்பெக்டர்... நவம்பர் 2015-ல் ரிலீஸ்!
ஜேம்ஸ்பாண்ட் 24... இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்!
அக்டோபர் 2015-ல் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம்!
ஜேம்ஸ் பாண்ட் படமான \'ஸ்கைபால்\' ரூ.700 கோடி வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions