ஜெயம்ரவிக்கு ரொம்ப பெரிய மனசு! - த்ரிஷா

Bookmark and Share

ஜெயம்ரவிக்கு ரொம்ப பெரிய மனசு! - த்ரிஷா

பெரும்பாலும் முன்னணி ஹீரோக்கள் தங்களை சுற்றித்தான் கதை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கதாநாயகிகளை தொட்டுக்கொள்ளும் கவர்ச்சி ஊறுகாயாகத்தான் பயன்படுத்த சொல்வார்கள். ஆனால் இந்த விசயத்தில் நிறையவே விட்டுக்கொடுக்கிறார் ஜெயம்ரவி.

குறிப்பாக, ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவுக்கே தன்னை விட பிரதான கேரக்டர் என்றபோதும், அதை அவர் பெருசுபடுத்தவில்லை. இதற்கெல்லாம் மேலாக, அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹன்சிகா தலைகாட்டாத போதும், அவர் தன்னை விட சிறப்பாக நடித்திருந்ததாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். இந்த மாதிரி கதாநாயகிகளின் நடிப்பை எந்த ஹீரோக்களும் இத்தனை ஓப்பனாக இதுவரை சொன்னதில்லை.

இந்த நிலையில், அடுத்தபடியாக அப்பாடக்கர் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி, அந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷா-அஞ்சலி இருவரில் த்ரிஷாவின் நடிப்பை புகழ்ந்து பேசி வருகிறாராம். சில காட்சிகளை குறிப்பிட்டு இந்த மாதிரியெல்லாம் இப்போது நடிப்பதற்கு ஆர்ட்டிஸ்ட் இல்லை.

அது த்ரிஷாவினால் மட்டுமே முடியும் என்று அவர் இல்லாத நேரத்தில் சொன்னாராம். விசயம் த்ரிஷாவின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து, இப்படி கதாநாயகிகளின் நடிப்பை பெருமையாக சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது ஜெயம்ரவியிடம் உள்ளது என்று பதிலுக்கு அவரை புகழ்ந்து தள்ளினாராம்.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!
திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: படப்பிடிப்புகளை ரத்து செய்தார்
தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்
அதிக சம்பளம் கேட்ட காஜலுக்கு கல்தா... ஜெயம் ரவிக்கு ஜோடியானார் த்ரிஷா!
நயன்தாராவின் அடுத்த ரொமான்ஸ் ஜெயம் ரவியுடன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions