கமலிடம் சண்டை போட்ட த்ரிஷா

Bookmark and Share

கமலிடம் சண்டை போட்ட த்ரிஷா

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'தூங்காவனம்' படத்தின் முதல் பார்வையை இன்று கமல்ஹாசன் ஹைதராபாத்தில் வெளியிட்டார். இந்தப் படம் தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என்ற பெயரிலும் தனியாக எடுக்கப்படுகிறது.

இன்று வெளியிடப்பட்ட மூன்று முதல் பார்வை போஸ்டர்களில் கமல்ஹாசன் மட்டுமே இடம் பெற்றிருந்தார். அதைப் பார்த்ததும் த்ரிஷா கமலிடம் ஏன் என்னுடைய போட்டோ இடம் பெறவில்லை என சண்டை போட்டாராம்.

இதை கமல்ஹாசனே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். “கமல் சாரிடமிருந்து எனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரம் இந்தப் படம். இந்த வரத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தர முயற்சிப்பேன்.

2008ம் ஆண்டில் அவரிடம் மூன்றாவது உதவி இயக்குனராகச் சேர்ந்தேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இப்போது ஒரு பரீட்சை ஹாலுக்குள் சென்றது போன்று உணர்கிறேன்,” என இயக்குனர் ராஜேஷ் எம்.சிவா தெரிவித்தார். “கமல் சாருடன் இரண்டாவது முறை இணைந்து நடிப்பது மிக்க மகிழ்ச்சி.

தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.  இப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் இதற்கு முன் கண்டிப்பாக பண்ணதில்லை. பிரகாஷ்ராஜ் சாருடன் என்னுடைய முதல் தெலுங்குப் படத்தில் நடித்தேன். மீண்டும் அவருடன் நடிப்பதும் மகிழ்ச்சி,” என த்ரிஷா பேசினார்.

கமல்ஹாசன் பேசுகையில்,

“நானும் படத்தோட ஃபோட்டோ ஷுட்டுக்கு வந்தேனே, உங்க போட்டோ மட்டும் போட்டிருக்கீங்களே என த்ரிஷா கேட்டார். இது முதல் பார்வை மட்டும்தான், இரண்டாவது பார்வையில் உங்களது புகைப்படமும் கண்டிப்பாக வரும் என்று சொன்னேன்.

போன மாதம் இங்கு வந்த போது பலரும் எப்போது நீங்கள் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிப்பீர்கள் எனக் கேட்டார்கள். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் நேரடியாகப் படமாக்குகிறோம். அதனால்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் ஆரம்பித்துள்ளேன்.

எனக்கும் அடிக்கடி தெலுங்குப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைதான். இனி, தொடர்ந்து நேரடித் தெலுங்குப் படங்களில் நடிக்க முயற்சிப்பேன்,” என கமல்ஹாசன் பேசினார். 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions