நாய் குட்டியை மாடியில் இருந்து வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்!

Bookmark and Share

நாய் குட்டியை மாடியில் இருந்து  வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்!

பிறந்து 5 மாதம் ஆன நாய்க்குட்டியை மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கி கீழே வீசுவது போன்ற வீடியோ படம் ‘வாட்ஸ் அப்’களில் பரவி பலரிடத்திலும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “நாய் குட்டியை மாடியில் இருந்து தூக்கி வீசிய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். அந்த நாய் குட்டி பிழைத்துக்கொண்டதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

“நீங்கள் பணக்காரரா? ஏழையா? என்பது பற்றி நாய் கவலைப்படுவது இல்லை. அதற்கு தெரிந்தது எல்லாம் உங்களை விரும்புவது மட்டும்தான் என்று நடிகை தீபிகா படுகோனே வெளியிட்ட கருத்தையும் எடுத்து தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் மருத்துவ லைசென்சை ரத்து செய்ய வேண்டும். நாயை காப்பாற்றிய நிஜ ஹீரோக்களுக்கு நன்றி.” என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, “இந்த பிரச்சினையில் போலீசார் வேகமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்” என்று கூறியுள்ளார். சினிமா பின்னணி பாடகர் கிரிஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாயை கீழே தூக்கி வீசியவர்கள் எப்படியும் வெளியே வந்து விடுவார்கள். இதற்கு ஒரே வழிதான் உள்ளது. அவர்களையும் இதேபோல தூக்கி எறிய வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions