மலையாள படத்தில் மம்முட்டி ஜோடியாகிறார் திரிஷா

Bookmark and Share

மலையாள படத்தில் மம்முட்டி ஜோடியாகிறார் திரிஷா

கடந்த 16 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு திரை உலகை கலக்கி வரும் திரிஷா கன்னட படங்களிலும் நடித்து விட்டார். ரஜினி தவிர தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள திரிஷா, இப்போது கமலுடன் தூங்காவனம் படத்தில் நடித்து இருக்கிறார்.

ஆனால், மலையாளப் படங்களில் இதுவரை நடிக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பும் அவரைத் தேடி வந்திருக்கிறது. திரிஷாவை நடிகையாக முதன் முதலில் அறிமுகம் செய்தவர் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன். என்றாலும் மலையாள திரையுலகில் திரிஷா அதிக கவனம் செலுத்தவில்லை.

இப்போது உதய் ஆனந்த் இயக்கும் ‘ஒய்ட்’ என்ற படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions