இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி

Bookmark and Share

இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி

படங்கள் ஓடுதோ இல்லையோ தனக்கு எப்போதும் ஆதரவளிக்க கூடிய ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை திரிஷா. சொல்லப்போனால் அவர் கடைசியாக நடித்த படங்கள் எதுவும் அவ்வளவாக வெற்றியடையவில்லை. இருந்தாலும் அவருக்கு படவாய்ப்புகளுக்கு குறைவில்லை.

அப்படிதான் தற்போது புதுமுக இயக்குனர் ரமணா மதேஷ் இயக்கிய மோகினி படத்தில் நடித்து முடித்துள்ளார். எஸ்.லஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி பாஹ்னானி நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையையும் R.B.குருதேவ் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.

மேலும் தற்போதைய காமெடி கிங்காக உள்ள யோகி பாபுவும் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டிரைலைரை பார்க்கும் படம் முழுக்க வெளிநாடு தான் போல தெரிகிறது. மேலும் படத்தில் கவர்ச்சிக்கும் குறைவிருக்காது.

எது எப்படியோ நாயகி படம் போல் இல்லாமல் கொஞ்சம் ரசிகர்கள் ரசிக்கும்படி அமைந்தால் படம் வெற்றி பெறுவது உறுதி. மேலும் தமிழில் சற்று சரிந்துள்ள மார்கெட்டையும் திரிஷா தூக்கி நிறுத்துவதற்கு உதவியாக இருக்கும்.


Post your comment





Related News
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions