அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த த்ரிஷா!

Bookmark and Share

அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த த்ரிஷா!

தெலுங்கில் வெளிவந்த ‘கிக் 1’, ‘கிக் 2’ ஆகிய வெற்றிப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கோவி, இவர் திரிஷா நடிப்பில் உருவாகவிருக்கும் ‘நாயகி’ படத்தின் மூலம் தமிழுக்கு இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். 

இப்படத்தின் கதையை திரிஷாவிடம் ஒரேயொரு முறை மட்டுமே சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் கோவி. தன்னுடைய முதல் படத்திலேயே தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா நடிப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தருவதாக கோவி தெரிவித்துள்ளார். 

இப்படத்தில் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் என்றாலும், கதாநாயகனாக கணேஷ் வெங்கட்ராமனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும், கோவை சரளா, மனோபாலா, செண்ட்ராயன் என காமெடி பட்டாளமும் இப்படத்தில் உண்டு. 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து அனைவரையும் மிரட்டியுள்ளது. திரிஷா தற்போது அரண்மனை 2 என்ற பேய் படத்தை தொடர்ந்து இப்படமும் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகவிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions