த்ரிஷா படப்பிடிப்பில் வரம்பு மீறல், நடிகர் சங்கம் கவலையுடன் வெளியிட்ட அறிக்கை

Bookmark and Share

த்ரிஷா படப்பிடிப்பில் வரம்பு மீறல், நடிகர் சங்கம் கவலையுடன் வெளியிட்ட அறிக்கை

த்ரிஷா தற்போது கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது.

ஆனால், இவர் PETA-வின் விளம்பர தூதர் என்பதால் பலரும் த்ரிஷா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம் என கூறினார்கள்.

இதற்கு நடிகர் சங்கம் தரப்பில் ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழியினருக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் அடையாளம் இருக்கிறது. இதையெல்லாம் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையாக நம்புகிறது.

அந்த வகையில் சிந்துவெளி நாகரிகம் கல்வெட்டில் இருந்து இன்றுவரை ஏறு தழுவுதல் என்கின்ற ஜல்லிக்கட்டு தமிழர்களின் தொன்மை அடையாளமாய் இருந்து வருகின்றது. சட்டத்திற்கு முன் ஜல்லிக்கட்டு பற்றி வேறு பார்வை இருக்கின்றது, ஆனால் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் இதைச் சட்டத்திற்கு புரியவைத்து நம்மொழி சார்ந்த கலாச்சாரங்களை வாழவைப்பது அவர்களுடைய கடமையாகிறது.

கடவுள், மதம், வாழ்கை, பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் இப்படி எல்லாவற்றுக்கும் தன் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய நம் அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தனது கருத்தை பதிவுசெய்த சில நடிகர், நடிகையிடம் படப்பிடிப்பில் சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது.

இந்த நேரத்தில் நம் கலைஞன் கமலஹாசன் தனது வலைபக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அதில் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்பவர்களை எல்லை மீறாமால் விமர்சிக்க வேண்டியதும், அதுவும் பெண்ணாக இருந்தால் கொச்சைப்படுத்தாமல் பதில் விமர்சனம் செய்வதும் கூட தமிழர் மரபு தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழர்களின் மரபு சார்ந்த ஏறு தழுவல் அவர்களின் உணர்வுகளையும், உள் எழுச்சிகளையும் புரிந்துக்கொண்டு அது எல்லை மீறுவதற்க்கு முன் மத்திய அரசு அவசர சட்டம் ஏற்றியேனும், இந்த வருடம் ஏர்தழுவலை நடத்தி கொடுக்க வேண்டும், என நாங்கள் வேண்டுகிறோம்.

இதுவே தமிழக மக்களுக்கு தரும் பொங்கல் பரிசாக இருக்கும் என்றும் நம்புகிறோம், அதற்காக காத்திருக்கிறோம்’ என்ற நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.


Post your comment

Related News
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்
மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions