த்ரிஷாவின் ‘நாயகி’யை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

த்ரிஷாவின் ‘நாயகி’யை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நடிகை த்ரிஷா தற்போது நாயகி எனும் ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவருடன் பிரம்மானந்தம், கோவை சரளா, மனோபாலா ஆகியோரும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து இப்படம் சம்மரில் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions