தெலுங்குத் திரையுலக நண்பர்களுக்கும் 'பார்ட்டி' கொடுத்த த்ரிஷா...

Bookmark and Share

தெலுங்குத் திரையுலக நண்பர்களுக்கும் 'பார்ட்டி' கொடுத்த த்ரிஷா...

தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் கடந்த மாதம் 23ம் தேதி சென்னையில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதற்கடுத்த  நாள் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பல நண்பர்களுக்காக தனிப்பட்ட 'பார்ட்டி' ஒன்றை திருமண ஜோடிகள் வைத்தனர்.

அதில் பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். அதன் பின் த்ரிஷா 'லயன்' தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றார். அங்கு படப்பிடிப்களுக்கிடையில் நெருக்கமான நண்பர்களை அழைத்து அங்குத் தனியாக 'பார்ட்டி' ஒன்றை வைத்திருக்கிறார்.

இதில் மஞ்சு மனோஜ், லட்சுமி மஞ்சு, நிகிஷா பட்டேல் உள்ளிட்ட சில நடிகர், நடிகையர் கலந்து கொண்டார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. த்ரிஷா, தமிழை விட தெலுங்கில்தான் அதிக  சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

ஏறக்குறைய அனைத்து  முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்திருக்கிறார். தற்போது இதுவரை ஜோடி சேர்ந்து நடிக்காத பாலகிருஷ்ணாவுடன் 'லயன்' படம் மூலம் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

தமிழில் "அப்பா டக்கர், போகி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன் நடித்துள்ள 'பூலோகம்' படம் இனிமேலாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions