பூனம்பாஜ்வாவுக்கு த்ரிஷா செய்த சிபாரிசு

Bookmark and Share

பூனம்பாஜ்வாவுக்கு த்ரிஷா செய்த சிபாரிசு

ஒரு கதாநாயகி நடிகை இன்னொரு நடிகையை சிபாரிசு செய்வது என்பது அபூர்வமான விஷயம். தான் நடிக்கும் படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க சக நடிகையை சிபாரிசு செய்தால், எங்கே தன்னை காலி பண்ணிவிடுவார்களோ என அஞ்சுவார்கள்.

இந்த விஷயத்தில் த்ரிஷா வித்தியாசமானவர். விதிவிலக்கானவர். பரத் நடித்த சேவல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.  அப்படத்தைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, எதிரி எண் 3 என பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தார்.

இவற்றில்  எந்தப்படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை.  பொங்கலுக்கு வெளிவந்த சுந்தர்.சியின் 'ஆம்பள' படத்தில் விஷாலுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.  இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'ரோமியோ ஜூலியட்' டில் ஹன்சிகாவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வாவும் நடித்திருக்கிறார்.

 தற்போது, த்ரிஷாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் 'போகி' என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் பூனம் பாஜ்வா. அப்போது த்ரிஷா உடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் அரண்மனை-2 படத்தில் இன்னொரு கதாநாயகி வேடம் இருப்பதை அறிந்து அந்த வேடத்துக்கு பூனம்பாஜ்வாவை சிபாரிசு செய்துள்ளார் த்ரிஷா. சித்தார்த் நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் ஏற்கெனவே த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டனர்.

 


Post your comment





Related News
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி
பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?
மீண்டும் இணையும் அரண்மனை 2 ஜோடி!
மனோஜ் கே.ஜெயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா!
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
பூனம் பஜ்வாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சுந்தர்.சி
ராணுவ வீரருக்கு மனைவியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா..!
த்ரிஷாவின் புதிய தோழிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions