தூங்காவனம் படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ்

Bookmark and Share

தூங்காவனம் படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ்

கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படமான தூங்காவனம் படம் பற்றிய அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு முறையாக அறிவித்தார். 

அந்தப் படத்தை அவருடைய உதவியாளரான ராஜேஷ் இயக்கப் போவதாகவும், கமலின் தற்போதைய அபிமான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் சொன்னார்.

ஆனால், இதுவரை இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரும் இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லையாம். 

ஒரு சர்வதேச தரத்தில் த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை கமல்ஹாசன் கண்டிப்பாக முழுவதுமாக கமர்ஷியல் படமாகவே தருவார் என்று தெரிகிறது. கமலின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே கமர்ஷியலாக வெற்றி பெறும் விதத்தில்தான் உருவாக்கப்படும்.

பரிசோதனை முயற்சிகளை கமல்ஹாசன் அடுத்த தயாரிப்பாளர் செலவில்தான் செய்வார் என கோலிவுட்டில் எப்போதுமே பேச்சு உண்டு. அதை சமீபத்தில் வந்த உத்தம வில்லன் படமும் நிரூபித்துள்ளது. 

சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் வெறும் 9 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வசூலித்துள்ளதாம். கமலின் முந்தைய பரிசோதனை முயற்சிப் படங்கள் அனைத்துமே வேறு தயாரிப்பு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும்.

ஒரு சில படங்கள் மட்டுமே அதில் விதிவிலக்காக இருக்கும். சினிமா என்பது வியாபாரம் என்று பேட்டிகளில் அதிகமாகப் பேசும் கமல்ஹாசன் படங்களை எடுக்கும் போது மட்டும் அதை மறந்து விடுவது ஏன் என சீனியர் தயாரிப்பாளர் ஒருவர் கேட்கிறார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions