த்ரிஷா என் தோழி இல்லை - லட்சுமிராய்

Bookmark and Share

த்ரிஷா என் தோழி இல்லை - லட்சுமிராய்

ஸ்ரீகாந்த், லட்சுமிராய் ஜோடியாக நடிக்கும் படம், ‘சவுகார்பேட்டை’. ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். சீனிவாச ரெட்டி ஒளிப்பதிவு. வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஷாலோம் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இதன் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.

அப்போது லட்சுமிராய் கூறியதாவது:

‘அரண்மனை’க்கு பின் தொடர்ச்சியாக பேய் பட வாய்ப்புகள் வந்தன. ஒரே மாதிரியாக நடிக்க விரும்பம் இல்லாததால் ஏற்கவில்லை. இதில் நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர். எனது கிளாமர் இமேஜை உடைக்க இதில் நடிக்கிறேன்.

சென்னைக்கு வந்தால் த்ரிஷா பற்றியே என்னிடம் கேட்கிறார்கள். அவருடன் நல்ல நட்புடன் இருந்தேன். இப்போது இல்லை என்பது மட்டும் உண்மை. த்ரிஷா என் தோழி இல்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.

அதற்கான காரணத்தை சொல்லத் தெரியவில்லை. அது எங்கள் இருவருக்குள்ளும் இருந்துவிட்டு போகட்டும். இவ்வாறு லட்சுமி ராய் கூறினார். த்ரிஷா திருமணம் செய்யப் போகும் தொழிலதிபர் வருண் மணியனை, முதலில் லட்சுமி ராய்தான் காதலித்து வந்தார் என்றும் பிறகுதான் த்ரிஷாவுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே த்ரிஷாவுக்கும் லட்சுமி ராய்க்கும் பிரச்னை என்று கூறுகின்றனர்.  பேட்டியின்போது ஸ்ரீகாந்த், வடிவுடையான், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் உடன் இருந்தனர். 


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions