அடுத்து செல்வராகவன் படம் : உறுதி செய்தார் த்ரிஷா

Bookmark and Share

அடுத்து செல்வராகவன் படம் : உறுதி செய்தார் த்ரிஷா

சிம்பு - த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ள நிலையில், இந்த தகவலை, த்ரிஷா தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில், சிம்பு உடன் த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் துவங்க உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். படத்தில் முக்கிய கேரக்டர்களில், டாப்ஸி மற்றும் ஜகபதிபாபு நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, த்ரிஷா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜீனியஸ் இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷா, இதற்கு முன், சிம்பு உடன் அலை மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் நடித்திருந்தார் த்ரிஷா - தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் இடையே சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், த்ரிஷா தொடர்ந்து புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதால், அவர்களது திருமணம் தடைபட்டுள்ளது.

இதன்காரணமாக, த்ரிஷா - வருண் மணியன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், திருமணம் ரத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், த்ரிஷாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions