கார்த்திக், ஜெஸ்ஸி இப்போ என்ன பண்றாங்க தெரியுமா? விடிவி 2 சீக்ரெட் சொன்ன கௌதம்!

Bookmark and Share

கார்த்திக், ஜெஸ்ஸி இப்போ என்ன பண்றாங்க தெரியுமா? விடிவி 2 சீக்ரெட் சொன்ன கௌதம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இன்றளவும் இப்படம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கௌதம் விரைவில் தொடங்கவுள்ளாராம். இதில் நான்கு மொழியை சேர்ந்த பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளார்கள். சிம்பு, விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக் கதாபாத்திரத்திலேயே நடிக்கவுள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? தற்போது 3,4 படங்களை முடித்து அவர் பெரிய இயக்குனராக இருப்பாராம். அப்போது அவரது நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செல்வதே இப்படத்தின் கதையாம்.

இதில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் சந்திப்பது போல ஒரு காட்சியும் இடம்பெறுகிறதாம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions