திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்

Bookmark and Share

திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்

சிம்ரன் கதாநாயகியாக நடித்த ‘ஜோடி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் திரிஷா. அதன்பின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பல வருடங்கள் கழித்து, சிம்ரனும் திரிஷாவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தில் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.

திரிஷா கூட ஜோடி படத்துல சேர்ந்து நடிச்ச நாள்களெல்லாம் ஞாபகம் இருக்கா, இப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்க என்ற கேள்விக்கு சிம்ரன் பதிலளிக்கும்போது, ‘திரிஷாவை முதல் முறை பார்த்த மொமெண்ட் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க சினிமாவுல தன்னை ஒரு நல்ல நடிகையா முன்னிலைப்படுத்திக்கிட்ட விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ‘ஜோடி’ படத்துல பார்த்தப்போவே இந்தப் பொண்ணு பெரிய ஆளா வரும்னு எனக்குத் தோணுச்சு.

டயலாக் இல்லாத சீன்கள்ல நடிக்கிறதுதான் இருக்கிறதுலேயே ரொம்பக் கஷ்டம். அதுல திரிஷா கில்லாடி. நானும் விஜய் சேதுபதியோட சேர்ந்து நடிக்கிறேன். திரிஷாவும் சேர்ந்து நடிக்கிறாங்க.

அவங்க இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறது எனக்குப் பெருமையா இருக்கு. சினிமாவுல என்னை மாதிரி டான்ஸ் ஆடுற இன்னொரு நடிகைனு அவங்களைச் சொல்வேன். இத்தனை வருடம் ஒரு நடிகை நிலைத்திருக்கிறது, பெரிய விஷயம். ஹாட்ஸ் ஆஃப் திரிஷா! என்று கூறியிருக்கிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions