எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா

Bookmark and Share

எனது நீண்ட நாள் ஆசை இது... மனம் திறந்த த்ரிஷா

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரின் அடுத்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஷாம்லி ஹீரோயின். த்ரிஷா டெரர் வில்லியாக நடிக்கிறார். 

இது பற்றி த்ரிஷா கூறியதாவது:

நடிக்க வந்து 10 வருடத்துக்கு மேலாச்சு. பெரும்பாலும் ஹீரோவுடன் டூயட் பாடுற கமர்ஷியல் ஹீரோயினாகத்தான் நடித்திருக்கிறேன். அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் வித்தியாசமாக நடித்திருக்கிறேன். இனி இதுபோன்று வித்தியாசமான படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.

எனது திறமையை வெளிப்படுத்துகிற மாதிரியான கேரக்டர்களில் தான் இனி நடிப்பேன். தூங்காவனம் படத்தில் கமல் சார் நடிக்க அழைத்த போது "இது ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜுலி மாதிரி ஆக்ஷன் கேரக்டர். என்னிடம் நிறைய அடிவாங்க வேண்டியதிருக்கும் என்று சொன்ன உடனேயே ஓகே சொல்லிவிட்டேன்.

அதே போல அரண்மணை 2ல் வித்தியாசமான த்ரிஷாவை பார்க்கலாம். நாயகி படத்தில் 80களில் இருந்த ஒரு நடிகையாக நடிக்கிறேன். படையப்பா நீலாம்பரி மாதிரி ஒரு பவர்புல் வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுகிறது என்கிறார் த்ரிஷா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions