உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா

Bookmark and Share

உடைந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக பிரார்த்தியுங்கள்: திரிஷா

பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மட்டுமல்ல, எல்லா மூலைகளிலும் உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என நடிகை திரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரீஸில் நேற்று அடுத்தடுத்து நடந்த தீவிரவாதத் தாக்குதல் நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரீஸ் தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்களும் தங்களது கண்டனங்களையும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தொடர்பான புகைப்படச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions