நீச்சல் என்பது எனக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சி : த்ரிஷா உற்சாகம்

Bookmark and Share

நீச்சல் என்பது எனக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சி : த்ரிஷா உற்சாகம்

திரிஷா ‘அரண்மனை’ பேய் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து ‘நாயகி’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். மலையாள படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது உடற்பயிற்சிகளில் திரிஷா தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

‘நாயகி’ அதிரடி கதையம்சம் உள்ள படம் என்றும் அதற்காகவே அவர் உடற்பயிற்சிகள் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகிறார். நீச்சல் உடையில் இருப்பது போன்ற தனது படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நீச்சல் பயிற்சி பற்றி திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-  ‘‘ஒவ்வொருவருக்கும் முதல் காதல் இனிமையானது. அது மனித காதல் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். பொருட்கள் மீதான காதலாக இருக்கலாம். ஆடைகள் மற்றும் உணவு மீதான காதலாகவும் இருக்கலாம். என்னுடைய முதல் காதல் நீச்சல். ஆரம்ப காலத்தில் தினமும் நீச்சல் பயிற்சிக்கு போவேன். அதன்பிறகு நடிப்பில் கவனம் திரும்பி விட்டதால் நீந்துவதற்கு போக முடியவில்லை. 

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போது மீண்டும் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறேன். நீச்சல் குளத்தில் 50 தடவை நீச்சல் அடித்தேன். நீச்சலைவிட சிறந்த உடற்பயிற்சி எதுவும் இல்லை. எடையை குறைத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நீச்சல் உதவுகிறது.’’ என்று உற்சாகமாக கூறினார்.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions