திரிஷாவுக்கு திருமணம் எப்போது? பதில் அளித்த திரிஷா

Bookmark and Share

திரிஷாவுக்கு திருமணம் எப்போது? பதில் அளித்த திரிஷா

நடிகை திரிஷா ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- 

கேள்வி: பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறீர்களே? 

பதில்: கவர்ச்சி கதாபாத்திரங்களில் வந்து போரடித்து விட்டது. ஒரே மாதிரி நடிப்பதை ரசிகர்களும் விரும்பமாட்டார்கள். வித்தியாசமாக வர ஆசைப்பட்டேன். பேய்க்கதைகளிலும் விருப்பம் இருந்தது. அப்போதுதான் அரண்மனை-2 படத்தின் வாய்ப்பு வந்தது. சம்மதம் சொன்னேன். என் நடிப்பை பார்த்து நிறைய பாராட்டுகள் வருகின்றன. 

கேள்வி: நடிகைகள் மத்தியில் போட்டி நிலவுகிறதே? 

பதில்: நடிகைகளுக்குள் போட்டி இருப்பது சகஜம். ஆனாலும் திறமையை பொறுத்தே பட வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு போட்டியை பார்த்து எப்போதுமே பயம் வந்தது இல்லை. அரண்மனை-2 படத்தில் நடித்த போது எனக்கும் ஹன்சிகாவுக்கும் சண்டை நடந்ததாக கிசுகிசுக்கள் வந்தன. அதை பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டோம். நாங்கள் நெருங்கிய தோழியாகவே இருந்தோம். எங்களுக்குள் எந்த தகராறும் நடக்கவில்லை. 

கேள்வி: நீங்கள் நடிக்கும் படத்தின் கதையை தேர்வு செய்வது யார்? 

பதில்: என்னுடைய கதைகளை நான் தான் தேர்வு செய்கிறேன். சில நேரம் குறிப்பிட்ட கதையில் நடிப்பதா? வேண்டாமா? என்று குழப்பம் வரும். அப்போது எனது அம்மாவிடம் யோசனை கேட்பேன். ஆனாலும் இறுதியான முடிவை நான் தான் எடுப்பேன். 

கேள்வி: சினிமாவை தவிர்த்து எதிர்காலத்தில் ஏதேனும் செய்ய ஆசை இருக்கிறதா? 

பதில்: நான் சாப்பாட்டு பிரியை. எனவே எதிர்காலத்தில் ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. 

கேள்வி: திருமணம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

பதில்: வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் சிலருக்கு சந்தோஷத்தை தரும். சிலருக்கு துக்கத்தை தரும். திருமண விஷயத்தில் என் வாழ்க்கையில் நான் இரண்டாவதாக சொன்னதுதான் நடந்தது. அதனால் இப்போது திருமணம்பற்றி யோசிப்பதே இல்லை. அதற்காக நடந்ததுபற்றியும் சிந்திக்க மாட்டேன். 

கேள்வி: திருமணமே வேண்டாம் என்று இருக்கப்போகிறீர்களா? 

பதில்: அப்படி இல்லை. பொருத்தமானவர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு தகுதியான மாப்பிள்ளை யார் என்பதை முடிவு செய்வது என்னை விட என் அம்மாவுக்கே நன்றாக தெரியும். எனவே திருமண முடிவை அவரிடம் விட்டுவிட்டேன். 

கேள்வி: பேய்கள் இருக்கிறது என்று நம்புகிறீர்களா? 

பதில்: பேய்கள் இருக்கிறதா? இல்லையா? என்று எனக்கு தெளிவாக சொல்ல தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு அற்புத சக்தி நம் எல்லோரையும் இயக்குகிறது என்று நம்புகிறேன். 

இவ்வாறு திரிஷா கூறினார்.


Post your comment





Related News
த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு கத்தி குத்து - என்ன நடந்தது? யார் காரணம்?
ஆபாசத்தால் சிம்பு படத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா?
6-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா !
அரசியலில் குதித்த திரிஷா
சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார்: திரிஷா பேட்டி
இன்னும் ஒரேநாளில் மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2
ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை 2
ஜல்லிக்கட்டு விவகாரம்: பீட்டா அமைப்பில் இருந்து திரிஷா விலக வற்புறுத்தல்!
தனுஷுக்கு வில்லியான த்ரிஷா!
த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் என்ன உறவு? ரகசியத்தை போட்டு உடைத்த ஆர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions